24

சென்றவாரம் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர்களைப் பற்றிப் பார்த்தோம். கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அன்றிலிருந்து, இன்றுவரை அணித்தலைவரிடம்தான் (கேப்டன்) அதிகபட்ச அதிகாரங்கள் இருந்து வந்துள்ளது. ஓர் இராணுவ யூனிட்டின் தலைமை போல தன் அணியின் மற்ற பத்து பேரையும் தான் விரும்பியதைச் செய்ய வைப்பது அணித்தலைவர்தான்.

பயிற்சியாளருடன் சேர்ந்து அணிக்கான விளையாட்டுத் திட்டத்தைத் தீர்மானிப்பது அணித்தலைவர். அணியில் யாரைச் சேர்ப்பது, அன்றைய போட்டியில் யாரை விளையாட வைப்பது, பேட்டிங்கில் யாரை எந்த வரிசையில் அனுப்புவது, யாரை பவுலிங் போட வைப்பது, பந்துத் தடுப்பு வியூகத்தை எப்படி அமைப்பது, டாஸில் ஜெயித்த பிறகு முதலில் பேட்டிங் செய்வதா, பவுலிங்கா என்று தீர்மானிப்பது, எப்பொழுது தன் அணியில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக (டிக்ளேர் செய்வது) அறிவிப்பது, எதிரணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொல்வது (ஃபாலோ-ஆன்), நடுவரிடம் தன் அணி வீரருக்காக வாதாடுவது என்று எல்லாவற்றையும் தனியாளாகத் தீர்மானம் செய்து நிறைவேற்றுவது அணித்தலைவர்தான்.

உலக கிரிக்கெட்டில் பேர் சொல்லக்கூடிய அணித்தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். அனைவரைப் பற்றியும் இங்கு நான் பேசப்போவதில்லை. ஒருசிலரை மட்டும் தொட்டுச் செல்கிறேன். பாடிலைன் (Bodyline) என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? உலகிலேயே தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஆஸ்திரேலியாவின் டொனால்ட் பிராட்மேன் இங்கிலாந்தை கதிகலங்க வைத்தார். அப்பொழுதைய இங்கிலாந்து கேப்டனாக இருந்த டக்லஸ் ஜார்டன் பாடிலைன் என்றொரு உத்தியைக் கண்டுபிடித்தார். லார்வுட், வோஸ் எனும் இரு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு மட்டையாளர்களின் கால்புறத்தில் பந்தைக் குத்தி எகிறவைத்து பந்தை மட்டையாளரின் இடுப்பு, விலாப் பகுதிகளில் வந்து மோதுமாறு செய்வது, கால்திசையில் அருகாமையில் மூன்று பந்துத் தடுப்பாளர்களை வைத்து எகிறும் பந்தில் கேட்ச் கிடைக்குமாறு செய்வது – இதுதான் பாடிலைன். அந்தக் காலத்தில் உடலுக்கான தடுப்புகள் எதுவும் கிடையாது. தலைக்கு ஹெல்மெட் கூட கிடையாது. இப்படி இங்கிலாந்து பந்து வீச ஆரம்பித்ததும், பிராட்மேனால் கூட ஓட்டங்களைப் பெற முடியவில்லை. (அப்படியும் அந்தத் தொடரில் பிராட்மேனின் சராசரி 50ஐத் தாண்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.) ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு உடம்பெங்கும் காயங்கள். இந்தப் பிரச்சினை பெரிதாகி வெடித்து ஆஸ்திரேலியாவுக்கும், பிரிட்டனுக்குமான ராஜதந்திர உறவில் கூட விரிசல் விழுந்தது.

டக்லஸ் ஜார்டன் கடைசிவரை தன்னுடைய உத்தியில் தவறேதும் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் கிரிக்கெட் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து பாடிலைன் பவுலிங் தடைசெய்யப்பட்டது.

 

பட்டையைக் கிளப்பு

வில்லன் நடிகராக பொடி ஹீரோக்களிடமும் அடி வாங்கும் நடிகர் பொன்னம்பலம், ‘பட்டையைக் கிளப்பு’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். சென்ற ஆண்டு இவர் “அம்மையப்பா’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். படம் பெரிதாய் வெற்றிப் பெறவில்லையென்றாலும் இவரால் வில்லனாக மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

‘பட்டையைக் கிளப்பு’ காமெடி கலந்த ஒரு காதல் கதையாம். காதல் கதையென்றால் சாதாரண காதல் இல்லையாம் வித்தியாசமான காதல் கதையாம். கத்திரிக்காய் காய்தால் கடைத்தெருவுக்கு வரத்தானே போகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் மூலம்தான் ‘தம்மாலும் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை

அடைந்தனர். ஆயினும் பல காலங்களுக்கு அந்த

அணியின் தலைவர் ஒரு வெள்ளையராகவே இருந்து வந்தார். கறுப்பர்களால் நன்றாக பந்து வீச முடியும், மட்டையாட முடியும், ஆனால் அணித்தலைவராகவெல்லாம் இருக்க முடியாது என்ற ஒரு பேச்சு உள்ளூர இருந்து வந்தது. அப்பொழுதுதான் பிராங் வோர்ரெல்  மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவராக ஆனார். கறுப்பர்களாலும் திறமையாகவும் விளையாடி, திறமையாகவும் அணியை நிர்வகிக்க முடியும் என்பதற்கு சான்றாக இருந்தவர். இதுவரையிலான உலக கிரிக்கெட் அணித்தலைவர்களிலேயே ‘ஜெண்டில்மேன்’ – கண்ணியமான கனவான் – என்ற மரியாதைக்குரியவர்.

வொர்ரெலுக்கு வெகுநாட்கள் கழித்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியவர் கிளைவ் லாயிட். இவர் காலத்தில்தான் ஓர் அணி மற்ற எல்லாரையும் விட மிகச் சிறப்பாக, பல காலங்களுக்கு கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக விளங்க முடியும் என்று முதலில் நிரூபித்தவர். சென்ற இடங்களிலெல்லாம் வெற்றி. இவரது கோபத்தை உசுப்பி விட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியை உலக சாம்பியன்களாக மாற்றியதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. மேற்கிந்தியத் தீவுகளுக்கே சென்று 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களை நான்காவது இன்னிங்ஸில் எடுத்து ஜெயித்தது இந்தியா. இப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணி தோற்றதற்குக் காரணம் அவ்வணியில் விளையாடிய ஸ்பின்னர்கள்தான் என்று உறுதியாக நம்பினார் லாயிட். இனி இப்படியொரு தோல்வி கனவிலும் கூட வரக்கூடாது என்று சூளுரைத்து, தன் அணியை வேகப்பந்து வீச்சாளர்களின் கூடாரமாக மாற்றினார். மார்ஷால், கார்னர், கிராஃப்ட், ராபர்ட்ஸ், ஹோல்டிங், ஆம்புரோஸ், வால்ஷ் என்று பிற்காலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற அதிவேகப் பந்து வீச்சாளர்களை உற்பத்தி செய்து அவர்களை மற்ற அணியினரின் மீது ஏவினார் லாயிட். விளைவு – ஒவ்வொரு அணியும் படுதோல்வி அடைந்தது. யாராலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பத்து வருடங்களுக்கு அணுகக்கூட முடியவில்லை. இடையில் முதலிரண்டு உலகக் கோப்பைகளையும் வென்றார். மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லமுடியாதவாறு முட்டுக்கட்டையிட்டது இந்தியாதான்!

கிளைவ் லாயிடைப் போல தற்காலத்தில் இருந்தது ஸ்டீவன் வா. சிலர் வா, லாயிடையும் விட உயர்ந்த அணித்தலைவர் என்று கூடச் சொல்லுவர். ஆஸ்திரேலியாவின் கேப்டன் இன்வின்சிபிள் கூட இந்தியாவின் முன்தான் தலை குனிய வேண்டியிருந்தது. இந்தியாவில் ஒரு தொடரையும் அவரால் வெல்ல முடியவில்லை. அதைவிடக் கொடுமையாக ஆஸ்திரேலியாவிலேயே போய் இந்தியா கடைசித் தொடரை டிராவில் முடித்தது. மற்றபடி எதிர்த்த அனைவரையும் தவிடுபொடியாக்கியது வா-வுடைய ஆஸ்திரேலியா. உலகக் கோப்பையில் இந்தியாவையும் அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலியா.

பல கேப்டன்களைப் பற்றிப் பேசுகையில் பாகிஸ்தானின் இம்ரான் கான் பற்றியும் பேசியாக வேண்டும். அவிழ்த்துக்கொட்டிய நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒருவரோடொருவர் ஒத்துப்போகாமல் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி வீரர்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர் இம்ரான் கான். ஆனாலும் மேற்சொன்ன பிறரைப் போல அவரால் உச்சத்தை அடைய முடியாததற்குக் காரணம் அவரது தொடர்ச்சியான உடற்காயங்கள், அதனால் பல ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமை, தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்குள்ளான பிரச்சனைகள் ஆகியவையே. ஆயினும் இவரது தலைசிறந்த பங்களிப்பு பாகிஸ்தானை உலகக் கோப்பை 1992ஐ வெல்ல வைத்தது.

இந்தியாவில் பேர் சொல்லக்கூடிய சில அணித்தலைவர்கள் நவாப் பட்டோடி, அஜித் வடேகர், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அசாருத்தீன், கங்குலி. இதில் கபில் தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது முக்கியமானது. ஆனால் இவர்கள் அனைவரிலும் முன்னுக்கு நிற்பது கங்குலிதான். மிகவும் ஏமாற்றத்தைத் தந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

இப்பொழுதைக்கு இந்திய அணி தனது சரித்திரத்திலேயே சிறந்து பங்காற்றியுள்ள கங்குலியின் தலைமையின் கீழும், இதுவரையிலானதிலேயே மிகச்சிறந்த பயிற்சியாளர் கீழும் உள்ளது. இனி வரும் மூன்று வருடங்களில் உலகில் உச்சிக்கே போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. செய்கிறார்களா பார்ப்போம்!

[கங்குலிக்கு வியாழன் அன்று பிறந்த நாள். வாழ்த்து கூறுவோம்.]

License

Share This Book